கூகுள் மேப் செயலியின் அசத்தல் அப்டேட்.. என்னனு தெரியுமா.?
Google maps new update
கூகுள் மேப் செயலியின் மூலமாக நாம் செல்லக்கூடிய வழியை எளிதில் தெரிந்துகொள்ள முடியும். இந்த செயலி வசதி வழிகளை அறிவதற்கு மட்டுமல்ல வழிகளில் உள்ள தடங்கல்கள் சிக்கல்கள் உள்ளிட்ட விஷயங்களை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.
இந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி வெளியூர் செல்லும்போது டோல்கேட் கட்டணங்கள் குறித்து கவலை வேண்டாம். எந்தெந்த ஊரில் எவ்வளவு டோல் கட்டணம் என்பதை கூகுள் மேப் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
இந்த வசதியை முதற்கட்டமாக இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் எந்தெந்த வாகனத்திற்கு எவ்வளவு டோல் கட்டணம் என்பதையும் இந்த புதிய வசதியின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.