வாட்சப்பில் புதிய அம்சம் - இனி மெசஜ்களைத் தேட வேண்டாம்.! - Seithipunal
Seithipunal


செல்போனில் மெசேஜ்களை வகைப்படுத்துவதை எளிதாக மாற்றும் வகையில் மற்றுமொரு அம்சத்தை இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப்-ன் சர்ச் பாரில் இடம் பெறும் வகையில் கொண்டு வரப்படுகிறது. 

அதன் படி வாட்ஸ்அப் இப்போதைக்கு மூன்று ஃபில்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, All, Unread மற்றும் Groups. இதில் All ஃபில்டர் என்பது டீபால்ட் ஆக உங்களுடைய சாட்கள் அனைத்தையும் எந்த ஒரு ஃபில்டரும் இல்லாமல் காட்டக்கூடியது. 

Unread ஃபில்டர் என்பது இதுவரை நீங்கள் படிக்காத அல்லது பதில் அளிக்காத அல்லது unread என்று நீங்கள் குறித்து வைத்த சாட்களை காட்டும். Groups ஃபில்டர் என்பது உங்களுடைய குரூப் சாட்கள் அனைத்தையும் காட்டக் கூடியது. 

இது தற்போது குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new update in whatsapp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->