மீண்டும் சர்ச்சை! இன்ஸ்டாவிலிருந்து சனியாவை தூக்கிய சோயிப் மாலிக்! - Seithipunal
Seithipunal


கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கும் திருமணம் செய்து கொண்டனர். 

காதல் தம்பதிகள் இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. நன்றாக சென்ற இவர்களின் திருமண வாழக்கையில் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இதற்கு சோயிப் மாலிக் மறுப்பு தெரிவித்திருந்தார். 

பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்த நிலையில், மாலிக்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடந்த மாற்றம் காரணமாக மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "மிகச்சிறந்த பெண்மணியான சானியா மிர்சாவின் கணவர்" என்று, சானியா மிர்சா குறித்த தகவல்களை மாலிக் நீக்கி இருப்பது தான் அந்த சர்ச்சைக்கு காரணம்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shoaib malik sania mirza divorce fake news issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->