போப் பிரான்சிஸ் மறைவு! அடுத்த போப் எப்படி தோ்ந்தெடுக்கப்படுவாா் தெரியுமா?
Next Pope selection method
நேற்று மறைந்த போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து, புதிய போப்பை தேர்வு செய்யும் புனிதமான செயல்முறை வாடிகனில் தொடங்கும்.
இந்நோக்கில், உலகம் முழுவதும் இருந்து 135 கார்டினல்கள் வாடிகனுக்குத் திரள்வார்கள். இதில், 108 பேரை நேரடியாக போப் பிரான்சிஸ் நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாடிகனில் உள்ள 'சிஸ்டைன்' தேவாலயத்தில், வெளியுலகத் தொடர்பில்லாமல் மூடப்பட்ட சூழலில் தினமும் நான்கு முறை வாக்கெடுப்பு நடைபெறும். புதிய போப்பாக தேர்வாக ஒரு கார்டினல், மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெறவேண்டும்.
ஒவ்வொரு வாக்கெடுப்பின் முடிவிலும், வாக்குச்சீட்டுகள் எரிக்கப்படும். அந்த எரிப்பின் புகையின் நிறமே முடிவை சுட்டிக்காட்டும். கருப்புப் புகை என்றால் தேர்வு நடைபெறவில்லை, வெள்ளைப் புகை என்றால் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அர்த்தம்.
செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இதற்காக காத்திருப்பார்கள். தேர்வான கார்டினல், போப்புப் பதவியை ஏற்க ஒப்புதல் அளிக்கவேண்டும்.
பிறகு, தனது போப் பெயரை அறிவித்து, வெள்ளை உடையில் மக்களுக்கு முன்னிலையாகி ஆசி வழங்குவார். தற்போதைய வாக்காளர்களில் ஐரோப்பாவிலிருந்து 53 பேரும், ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பிராந்தியங்களிலிருந்தும் பலர் உள்ளனர்.
English Summary
Next Pope selection method