ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளனர்..!
35 Tamils who went on a tour to Jammu and Kashmir have arrived in Delhi
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகளில் கொடூர தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளதோடு, மேலும் சிலர் காயமைடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலாவிற்கு சென்ற 35 தமிழர்கள் பத்திரமாக டில்லி திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த குறித்த 35 பேரும் காஷ்மீரிலிருந்து தங்களது மாநிலத்திற்கு திரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் இன்று (ஏப்ரல் 23) பிற்பகல் டில்லி வந்து சேர்ந்துள்ளனர். டில்லி திரும்பிய அவர்களை டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் வரவேற்றுள்ளார். இந்த 35 சுற்றுலாப் பயணிகளும் ரயில் மூலம் இன்று இரவே சென்னை திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
35 Tamils who went on a tour to Jammu and Kashmir have arrived in Delhi