இந்த ராசிக்காரர்களை காதலிச்சா.. உங்க வாழ்க்கை இப்படி தான் இருக்கும்.!
Partner zodiac and Character Of Love Journey
மேஷ ராசிக்காரர்கள் தங்களுடைய இணையரை திருப்தி படுத்துவதற்காக எந்த ஒரு எல்லைக்கும் போகக்கூடியவர்கள். எனவே இவர்களது காதலன் அல்லது காதலியோ மனைவி அல்லது கணவனோ எப்போதும் திருப்தியுடன் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.
ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் விளையாட்டுப் பிள்ளையை போலவே இருப்பார்கள். அவர்கள் உறவை நகைச்சுவையாகவும் அதே நேரம் அர்த்தம் உள்ளதாகவும் காப்பாற்றுவார்கள்.
மிதுன ராசி க்காரர்கள் தங்களது காதலை மூச்சுக்காற்றை போல எந்த நேரமும் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். எனவே, மிதுன ராசிக்காரர்களை காதலர்களாக கொண்டவர்களுக்கு லவ் டார்ச்சர் அதிகமாக இருக்கும்.
கடக ராசிக்காரர்கள் மிகவும் ஆழமான காதலை கொண்டிருப்பார்கள். இவர்கள் அதிகப்படியாக காதலை வெளிப்படுத்தவில்லை என்றாலும், கூட அவர்களது உறவின் மீது மிகவும் தீவிரத்துடன் இருப்பார்கள். அதே நேரம் உறுதியுடன் இருப்பார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் என்ன தான் தீவிரமான ஒரு காதல் தோல்வி அடைந்தாலும், மிக விரைவில் அடுத்த காதலை தேடி சென்று விடுவார்கள். இவர்களுக்கு இணையரின் மேல் அதிகப்படியான அன்பு இருந்தாலும் கூட உறவு முறிந்த பின்னர் அதைப்பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ள மாட்டார்களாம். ஆனால், காதலிக்கும் போது புதிய புதிய விஷயங்களை மேற்கொண்டு உறவை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பார்களாம்.
English Summary
Partner zodiac and Character Of Love Journey