நாளை குருவார பிரதோஷம்.. மனக்கவலைகள் நீங்க சிவபெருமானை வழிபடுங்கள்.! - Seithipunal
Seithipunal


சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம்:

சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். சிவபெருமானுக்குரிய வழிபாடுகளில் பிரதோஷ கால விரத வழிபாடு முக்கியமானது.

பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம்.

முதல் சுற்றில் செய்யப்படும் வேத பாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

இந்த தினத்தில் நந்தி தேவர் மற்றும் சிவபெருமானை முறைப்படி வணங்கி வழிபடுபவர்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவார்கள்.

இந்த சித்திரை தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிரதோஷ காலம் எது?

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது.

அதன்படி நாளை (28.04.2022) பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறது. பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு.

சித்திரை மாத வியாழக்கிழமை பிரதோஷம் :

வியாழக்கிழமையில் வரும் பிரதோஷம் 'குருவார பிரதோஷம்" ஆகும்.

குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழக்கிழமையான நாளை (28.04.2022) பிரதோஷ விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்ய கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கும்.

ஒரு வருடத்தில் வரும் 24 பிரதோஷத்திற்கும் சிவபெருமானின் ஆலயத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும்.

இந்த 8 பிரதோஷத்தன்று சிவபெருமானின் ஆலயத்திற்கு சென்றால் ஒரு வருட பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.

பலன்கள் :

சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம் அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாட்டால் கல்வி பெருகும்.

செல்வம் வளரும், நோய்கள் விலகும், கடன், மனக்கவலை அகலும்.

ஒரு பிரதோஷ பூஜை ஆயிரம் சிவபூஜை செய்தமைக்கு சமம். ஆகவே பலன்களும் அதிகம்.

இந்த பிரதோஷ காலத்தில் சிவபெருமானின் ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்தால், அளவற்ற நன்மைகள் அடையலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomorrow Guru Weak pradhosham vazhipadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->