ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் எங்கு? எப்போது தொடக்கம்.? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
2023 Asia Cup announcement
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
அதன்படி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இலங்கை பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று முடிவில் 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அந்த வகையில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மற்றுமொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 17 அன்று இறுதிப் போட்டியில் விளையாடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை முதலில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்ட நிலையில், பாகிஸ்தானில் போட்டிகள் நடைபெற்றால் இந்திய அணி பங்கேற்காது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து இந்தியா அணியின் போட்டிகளை பொதுவான மைதானத்திலும், மற்ற நாடுகளின் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த பாகிஸ்தான் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி ஆசியக் கோப்பை போட்டிகள் பாகிஸ்தானிலும், இந்தியா விளையாடும் போட்டிகள் இலங்கையிலும் நடைபெற உள்ளன. அந்த வகையில் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள போட்டிகள் இலங்கையிலும் நடைபெற உள்ளன.
English Summary
2023 Asia Cup announcement