நோ யு டர்ன்.. இதுவே கடைசி ஆட்டம்.. ஓய்வு குறித்து அம்பத்தி ராயுடு ட்விட்..!! - Seithipunal
Seithipunal


நடப்பு ஐபிஎல் தொடருக்கான இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்த உள்ளன. 

நடப்பு சாம்பியனான குஜராத் அணி ஐபிஎல் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. அதேபோன்று ஏற்கனவே 4 முறை பட்டம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் 5வது முறையாக ஐபிஎல் கோப்பை வெல்லும் துடிப்புடன் களமிறங்க உள்ளது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வந்த அம்பத்தி ராயுடு தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இரண்டு சிறந்த அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ், 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளே ஆஃப்கள், 8 இறுதிப் போட்டிகள், 5 கோப்பைகள். இன்று இரவு 6வது. இது ஒரு பயணம். இன்றிரவு நடக்கும் இறுதிப் போட்டிதான் ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளேன். இந்த சிறந்த போட்டியை நான் உண்மையிலேயே ரசித்தேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. நோ யூ டர்ன்" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambati Rayudu announces retirement from IPL


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->