INDvsPAK | இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்?! கடைசி நேரத்தில் செம்ம டிவிஸ்ட்! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கி உள்ளது.

இதுவரை நடந்த  இரண்டு லீக் ஆட்டங்களில், முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானும், 2-வது ஆட்டத்தில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளது.

நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது லீக் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

பல்லேகலே மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்திற்காக  இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் அணி இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி ஆட்டம் துவங்கும் சில நிமிடங்களுக்கு முன்பு தான் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளுக்கு எதிரான ஆட்டங்கங்களில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் ராகுல் டிராவிட் அறிவித்திருந்த நிலையில், அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பிங் செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

சஞ்சு சாம்சன் இடம் பெற வாய்ப்புகள் இல்லாத நிலையில், இஷான் கிஷான் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

மேலும், இஷான் கிஷான் 3 ஆவது வீரராகவும், விராட் கோலி 4-வது இடத்திலும், ஷ்ரேயாஸ் ஐயர் 5-வது இடத்திலும் களமிறங்குவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 

ரோகித் சர்மா - சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் அணியில், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ASIA CUP 2023 IND vs PAK TEAM INDIA INFO KL RAHUL


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->