சாதனைகளை வாரிக் குவித்த விராட் & கே.எல்.ராகுல்! அதிலும் விராட் வேற லெவல் சாதனை! - Seithipunal
Seithipunal



ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்களை அடித்து அசத்தியுள்ளது.

அதிகபட்சமாக விராட் கோலி விராட் கோலி 122 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 111 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இதன் மூலம் பல சாதனைகளை புரிந்துள்ளனர். அதன் பட்டியல் பின்வருமாறு:

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிக ரன்கள் அடித்த பார்ட்னர்ஷிப்பில் விராட் கோலி & கே.எல்.ராகுல் - 233 ரன்கள் உடன் முதலிடம் பிடித்துள்ளனர். 

என்.எஸ்.சித்து & சச்சின் டெண்டுல்கர்- 231 ரன்கள் (1996)
ஷிகர்  தவான் & ரோஹித் சர்மா - 210 ரன்கள் (2018)
ராகுல் டிராவிட் & வீரேந்திர சேவக் - 201 (2005)

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் மற்றும் குறைந்த இன்னிங்க்சில் 13000 ரன்களை கடந்த சாதனையை விராட்கோலி படைத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் - 18,426 - 13000 ரன் - 321  இன்னிங்ஸ்
குமார் சங்ககாரா - 14,234 - 13000 ரன் - 321  இன்னிங்ஸ்
ரிக்கி பாண்டிங் - 13,704 - 13000 ரன் - 341  இன்னிங்ஸ்
சனத் ஜெயசூர்யா - 13,430 - 13000 ரன் - 416  இன்னிங்ஸ்
விராட் கோலி - 13,024 - 267 இன்னிங்ஸ் (முதலிடம்)

இலங்கை நாட்டின் கொழும்பு மைதானத்தில் விராட் கோலி ஆடிய கடைசி 4 ஆட்டங்களிலும் செஞ்சுரி அடித்து சாதனை!

128* (119 பந்துகள்), 131 (96 பந்துகள்), 110* (116 பந்துகள்), 122* (94 பந்துகள்)

ஆசியக் கோப்பை ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் விராட் கோலி & கே.எல்.ராகுல் - 233 ரன்கள் உடன் முதலிடம் பிடித்துள்ளனர்.

முகமது ஹஃபீஸ் & என். ஜம்ஷெத் - 224 ரன்கள் (இந்தியாவுக்கு எதிராக) (2012)
சோயிப் மாலிக் & யூனிஸ் கானஸ் - 223 ரன்கள் (ஹாங்  காங்குக்கு எதிராக) (2004)
பாபர் அசாம் & இஃப்டிகார் அகமது - 214 ரன்கள் (நேபாளத்துக்கு எதிராக) (2003)

ஆசியக் கோப்பையில் ஒருநாள் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி - 4 சதங்கள் உடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் சனத் ஜெயசூர்யா - 6 சதங்கள். மூன்றாம் இடத்தில குமார் சங்ககாரா - 4 சதங்கள், நான்காம் இடத்தில சோயிப் மாலிக் - 3 சதங்கள்

ஒருநாள் போட்டி ஆட்டங்களில் 3-வது மற்றும் 4-வது இடத்தில் களமிறங்கிய இந்திய வீரர்களில் இரு வீரர்களும் சதம் விளாசிய பட்டியலில் விராட் கோலி & கே.எல்.ராகுல் இணைந்துள்ளனர். முன்னதாக, 

ராகுல் டிராவிட் & சச்சின் டெண்டுல்கர் (கென்யாவுக்கு எதிராக -1999), கௌதம் கம்பீர் & விராட் கோலி (இலங்கைக்கு எதிராக - 2009) இந்த சாதனையை படைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asia Cup 2023 IND vs PAK Virat And KL Rahul New Records


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->