நீண்ட இழுபறிக்கு பின் ஆசிய கோப்பை அட்டவணை வெளியீடு! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பைகளுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிசிசிஐ கௌரவச் செயலாளர் ஜெய் ஷா தனது பக்கத்தில் ஆசிய கோப்பை காண போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில் "பலதரப்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கும் ஒற்றுமை மற்றும் ஒற்றுமையின் சின்னமான, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்கள் ஆசிய கோப்பை ஒரு நாள் போட்டிக்கான அட்டவணையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! கிரிக்கெட்டின் சிறப்பைக் கொண்டாடுவதில் கைகோர்ப்போம், நம் அனைவரையும் இணைக்கும் பிணைப்புகளைப் போற்றுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குரூப்-ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபால் அணிகளும், குரூப்-பி பிரிவில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நேபாள அணியை எதிர்கொள்கிறது. குரூப் ஸ்டேஜ் மற்றும்  சூப்பர்-4 என நடைபெறும் போட்டிகளில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பையின் இறுதி போட்டி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asia Cup 2023 schedule announced


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->