843 விக்கெட்! "மேட்ச்-வின்னிங் ஸ்பெல்" - தவிர்க்க முடியாத பந்து வீச்சாளன் ஸ்டூவர்ட் பிராட்! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடந்து வரும் ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் ஆட்டத்தின் 3வது நாளில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தனது ஓய்வை அறிவிப்பை வெளியிட்டார். 

முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் கிறிஸ் பிராட்டின் மகன் தான் ஸ்டூவர்ட் பிராட். தந்தை கிரிக்கெட்டேர் என்பதால் பள்ளிக் காலத்தின்போது கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட தொடங்கினார்.

ஆரம்பத்தில் பேட்ஸ்மேனாக பயிற்சி எடுத்து ஆடிய ஸ்டூவர்ட் பிராட், பின்னர் பந்துவீச பயிற்சி மேற்கொண்டு, அதையே தனது கேரியராக அமைத்து கொண்டார். 

கடந்த 2007ல் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில், ஸ்டூவர்ட் பிராட் அறிமுகமானார். முதல் ஆட்டத்திலேயே தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்டூவர்ட் பிராட், ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.


ஆட்டத்தில் வெற்றிபெறுவதற்கு உண்டான பந்துவீச்சில் புகழ் பெற்ற ஸ்டூவர்ட் பிராட், இதுவரை 20 முறைக்கும் மேல் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று முறை 10 விக்கெட்டுகளை எடுத்து பல ஆட்டநாயகன் விருதுகளையும் தட்டி சென்றுள்ளார் ஸ்டூவர்ட் பிராட்.

கடந்த 2015ல் நடந்த ஆஷஸ் தொடரில் ஆன்டர்சன் காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். அப்போது, தனியொரு ஆளாக போராடி 8-15 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய விக்கெட்களை வீழ்த்தி அணியை வெற்றி பெறவைத்த ஸ்டூவர்ட் பிராட், தனது வாழ்வின் சிறந்த ஆட்டம் என்று அடிக்கடி குறிப்பிடுவார்.

 

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டி20 , ஒருநாள் மற்றும் டெஸ்ட் என  343 ஆட்டங்களை விளையாடி உள்ள  ஸ்டூவர்ட் பிராட் இதுவரை 843 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

டெஸ்ட் ஆட்டங்களை பொருத்தவரை 166 ஆட்டங்களில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 121 ஆட்டங்களில் 178 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார், 56 டி20 ஆட்டங்களில் 65 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார்.


சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு : 

இந்த ஆஷஸ் டெஸ்ட் ஆட்டம் தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

தனது 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ஸ்டூவர்ட் பிராட் தெரிவிக்கையில், "இது அற்புதமான பயணம், நாட்டிங்ஹாம்ஷயர், இங்கிலாந்து பேட்ஜ் அணிந்திருப்பது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம். 

இந்த ஆஷஸ் தொடர் ஒரு அற்புதமான தொடர். இதில் நானும் அங்கம் வகித்தது எனக்கு மகிழ்ச்சி. அதனால்தான் எனது கடைசி போட்டி ஆஷஸில் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். 

முந்தைய நாள் இரவே பென ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரிடம் எனது ஓய்வு முடிவை தெரிவித்துவிட்டேன். நான் ஓய்வு பெற இதுதான் சரியான நேரம்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

England Cricketer stuart broad Retirement


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->