INDvsPAK | சொன்னது போலவே நடக்குதே! நிலைகுலைந்த இந்திய ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை 2023 தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன.

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது.

தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, கில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சற்று தடுமாற்றத்துடனேயே எதிர்கொண்டனர்.

இதில் ரோஹித் சர்மா, ஷஹீன் ஷா அப்ரிடி பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். மறுமுனையில் கில் ரன் எடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்க, களமிறங்கிய விராட் கோலியும் பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்.

பின் விராட் கோலியும் ஷஹீன் ஷா அப்ரிடி பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். தற்போதுவரை இந்திய அணி 9.5 ஓவர்களில், 3 விக்கெட் இழப்பிற்கு, 48 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

முன்னதாக நேற்று பகிஸ்தான் அணியில் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளதால், இந்திய வீரர்கள் சூதனமாக ஆட வேண்டும் என்று, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி எச்சரித்து இருந்தார்.

இன்று அவர் சொன்னது போலவே, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு தாக்குதல் பயங்கரமாக அமைந்துள்ளது. ஆனால், இந்திய அணியின் பேட்டிங் ஆரம்பமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடையில் மழை குறிக்கிட்டதும், மைதானத்தின் நிலையம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை என்றும் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDvsPAK asia cup 2023 virat rohit out


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->