கேலோ இந்தியா விளையாட்டு போட்டி 2024: தொடர்ந்து பதக்கங்களை குவிக்கும் தமிழகம்!  - Seithipunal
Seithipunal


சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. 

நேற்று நடைபெற்ற கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி ஹரியானாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. 

கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்க பதக்கம் வென்றுள்ளது இது நான்காவது முறையாகும். கைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழகம் குஜராத்தை வென்று வெண்கலத்தை கைப்பற்றியுள்ளது. 

தமிழக வீரர் கிஷோர் சைக்கிள் பந்தயத்தில் 2 மணி 04 நிமிடம் 02.980 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். மற்றொரு தமிழக வீரர் வெண்கலம் வென்றுள்ளார். 

பெண்களுக்கான நீச்சல் போட்டியில் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீராங்கனை தங்க பதக்கத்தை வென்றார். இதே போல் பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தை சேர்ந்த தீர்ஷன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 

பதக்க போட்டியில் முதல் 2 இடங்களில் 37 தங்கம் உள்பட 109 பதக்கங்கள் வென்று மராட்டியமும், 29 தங்கம் உள்பட 77 பதக்கங்கள் வென்று தமிழகமும் நீடிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Khelo India youth games update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->