யாருப்பா நீ? முதுகுல கேட்ச் புடிக்குற... கிரிக்கெட்டில் நிகழ்ந்த அதிசயம்! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட்டை கண்டுபிடித்தது இங்கிலாந்தாக இருக்கலாம். ஆனால், கிரிக்கெட்டை உயிர்மூச்சாக, வெறித்தனமாக நேசிப்பவர்கள் இந்தியர்கள் தான்.

தற்போது இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

வருகின்ற 15 ஆம் தேதி நடக்கும் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி இறுதி போட்டிக்கு செல்லவேண்டும் என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், ஒரு டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில், விக்கெட் கீப்பர் தனது முதுகால் கேட்ச் பிடித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பேட்ஸ்மேன் அடித்த பந்து கீப்பர் கையில் பட, அவர் கீழே விழ, அவர் முதுகில் பந்தும் விழுகிறது. அந்த நொடியே சாமர்த்தியமாக யோசித்த கீப்பர், முதுகில் விழுந்த பந்தை கீழே விழாமல் கையை வைத்து தடுத்துகொண்டார்.

இப்படி ஒரு கேட்ச்சை யாரும் இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் பாத்திருக்க முடியாது. என்று இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரென்ட் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

miracle catch in cricket viral video


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->