ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஈடுபடுவதற்கு தடை - ஐசிசி அதிரடி!
Shakib Al Hasan Cricket ban
சில மாதங்களுக்கு முன்பு வங்கதேச கிரிக்கெட் அணியின் ஷகிப் அல் ஹசன், டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்த ஷகிப் அல் ஹசன், அந்த போட்டிகளில் பந்து வீசும் முறையில் விதிகளை மீறியதாக புகார் எழுந்தது.
இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை விசாரணை செய்து சோதனை நடத்தியபோது, ஷகிப் விதிகளை மீறி பந்துவீசியது உறுதியானது.
இதையடுத்து, முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ஷகிப் அல் ஹசனுக்கு பந்துவீச்சில் இருந்து இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது.
இதன் விளைவாக, ஐசிசி அங்கீகரித்த அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Shakib Al Hasan Cricket ban