பிரபல தபேலா இசைமேதை மருத்துவமனையில் அனுமதி..ரசிகர்கள் கவலை! - Seithipunal
Seithipunal


இந்திய பாரம்பரிய இசையை உலகெங்கும் பறைசாற்றிய ஜாகிர் ஹுசைன்தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஜாகிர் உசேனின் நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சௌராசியா இன்று தெரிவித்துள்ளார்.

73 வயதான அமெரிக்காவில் வசித்து வந்த ஜாகிர் உசேனுக்கு ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக ஜாகிர் ஹுசைனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஜாகிர் உசேன் ,1988ல் பத்மஸ்ரீ , 2002ல் பத்ம பூஷன் மற்றும் 2023ல் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.1990ல் இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும் , சங்கீத நாடக அகாடமி ஃபெல்லோஷிப், 2018ல் ரத்னா சத்யா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. பிப்ரவரி 2024ல் அவர் மூன்று கிராமிகளைப் பெற்றார்.

இந்திய பாரம்பரிய இசையை உலகெங்கும் பறைசாற்றிய அவர், தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது நண்பரான புல்லாங்குழல் இசைக்கலைஞர் ராகேஷ் சவுராசியா கூறியதாவது:

ஜாகிர் உசேனுக்கு கடந்த ஒரு வார காலமாக, இதயம் தொடர்பாக, பிரச்னை இருந்தது. இந்நிலையில் அவர், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது நிலைமை கவலைக்குரியதாக இருக்கிறது.இவ்வாறு ராகேஷ் சவுராசியா கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tabla maestro hospitalised Fans are worried


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->