டி20 உலகக்கோப்பை இன்று தொடக்கம்.. இலங்கை vs நமீபியா & யுஏஇ vs நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்.!
T20 world cup From today group 1 matches
ஐசிசி 8வது டி20 உலக கோப்பை இன்று முதல் (அக்டோபர் 16 ) முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 16 அணிகள் விளையாடுகின்றன. இதில் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.
மீதமுள்ள 4 இடங்களுக்கான அணிகள் முதல் சுற்று ஆட்டங்களில் இருந்து தேர்வாகும். இந்த முதல் சுற்று போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதில், முதல் சுற்றில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், 2014-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் சூப்பர் 12 சுற்றில் கலந்துகொள்ளும். இந்த 4 அணிகளும் 22-ம் தேதி தொடங்கும் சூப்பர் 12 சுற்றில் மோதுகின்றன.
அதன்படி, இன்று நடைபெறும் முதல் சுற்று போட்டியில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை-நமீபியா அணிகள் மோதுகின்றன.
இதுவரை நேருக்கு நேர்
இலங்கை - நமீபியா அணிகள் இதுவரை ஒரே ஒரு டி20 போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் 2வது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் - நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றன.
இதுவரை நேருக்கு நேர்
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதர்லாந்து அணிகள் இதுவரை 8 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 4 போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகமும், 4 போட்டிகளில் நெதர்லாந்து அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.
English Summary
T20 world cup From today group 1 matches