#BigBreaking || இங்கிலாந்து அணி ஆல்-அவுட்., உலக கோப்பையை 5 வது முறையாக வெல்ல., இந்திய அணிக்கு வைக்கப்பட்ட இலக்கு.!
Under19 cricket worldcup Final 2022 INDvENG
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இன்று இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய முடிவு செய்து.
அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜார்ஜ் தோமஸ் 27 தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்த இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய ஜமிஸ் ரேவ் தனது அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணியை மீட்டெடுத்தார். அவரின் விக்கெட்டை வீழ்த்தினால் இங்கிலாந்து அணியை குறைந்த ரன்னில் சுருட்டி விடலாம் என்று, பல யூகங்களை வகுத்து இந்திய அணி பந்துவீசியது. ஆனால், இந்திய அணியின் பந்து வீச்சை சமாளித்து, அரைசதத்தை அடித்தார் ஜமிஸ் .
ஜமிஸ் இன்னும் 5 ரன்கள் அடித்தால் தனது செஞ்சுரி பூர்த்தி செய்து விடலாம் என்ற நிலையில், அவசரப்பட்டு ஒரு சிக்ஸர் அடிக்க முயன்றார். அது கேட்சாக மாறி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 116 பந்துகளில், 12 பவுண்டரிகள் உட்பட 95 ரன்களை ஜமிஸ் சேர்த்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 189 ரன்களை சேர்த்தது.
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, அசத்தலாக பந்துவீசிய ராஜ் பாவா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரவிக்குமார் தலா 4 விக்கெட்டுகளையும், தாம்பே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
செய்தி தொகுப்பு :
19 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது.
16 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரில், அரை இறுதி ஆட்டங்களுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றன.
இந்திய அணி:
2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து தொடர்ந்து 4-வது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 8-வது முறையாகவும் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
4 முறை சாம்பியனான இந்தியா 5-வது முறையாக பட்டத்தை வெல்லும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இங்கிலாந்து அணி:
முதல் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
1998 ஆம் ஆண்டு முதன்முறையாக ஜூனியர் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி அதன் பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் ஆடி வருகிறது.
கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டியில் தற்போது இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஆடி வருகின்றன.
English Summary
Under19 cricket worldcup Final 2022 INDvENG