சீர்காழி அருகே மீன் லாரியில் 1000 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் ..!! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் அரசால் தடை செய்யப்பட புகையிலை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையில் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து மயிலாடுதுறை போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகே முத்துராஜ் என்பவர் அவரது கடையில் அரசால் தடை செய்யப்பட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறையினர் அங்கு வைத்திருந்த 7 கிலோ அளவுள்ள குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். 

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் வேலவன் நகரில் உள்ள ரமேஷ் என்பவரது குடோனில் தான் இந்த தடை செய்யப்பட பொருட்கள் விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த குடோனில் மதுவிலக்கு அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், குடோனுக்கு வெளியே நின்று கொண்டிருந்த மீன் ஏற்றிச் செல்லும் லாரியை போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது அந்த லாரியில் 1000 கிலோ அளவுள்ள ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீன் வைக்கும் பெட்டிகளை வைத்து மறைத்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புகையிலைப் பொருட்களின் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் என்று தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கடை உரிமையாளர் முத்துராஜ், குடோன் உரிமையாளர் ரமேஷ் உட்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1000 Kg Haans and Coolip packets Seized Near Seergazhi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->