11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. வழக்கம்போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி.!
11th public exam results announced
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 7.70 லட்சம் மாணவ-மாணவிகளும் எழுதினர். இதில்11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், மாணவர்கள் 86.99 சதவீத தேர்ச்சியும், மாணவிகள் 94.36 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர். மாணவர்களை விட 7.37 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
English Summary
11th public exam results announced