மக்களே குட் நியூஸ் : சென்னையில் இருந்து 1,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
1265 special buses operate from Chennai
சுப முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களையோட்டி 7,8,9தேதிகளில் சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்ல 1,265 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் தொடர்ந்து மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கணிசமாக மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளைக்கு நாள் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அனேக பேருந்துகளில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் பயணிகளுக்கும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு போன்ற பிரச்சனைகள் அடிக்கடி வருவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் 7,8, 9 தேதிகளில் சுப முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்கள் வர உள்ள நிலையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி,கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, தூத்துக்குடி,திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 7ம் தேதி 835 சிறப்பு பேருந்துகளும், 8ம் தேதி 570 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர்,பெங்களூருக்கு 7 மற்றும் 8ம் தேதிகளில் 160 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பத்தாம் தேதி பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அணை மாநிலங்களில் இருந்து சென்னை திரும்ப 9ம் தேதி 705 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
1265 special buses operate from Chennai