காரில் கஞ்சா கடத்திய கோவிலூர் விஏஓ உட்பட 3 பேர் கைது..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் உள்ள கேப்பாறை பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். 

அப்பொழுது அவழியாக புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சியை சேர்ந்த ஜெயரவி வர்மா என்பவர் பயணம் செய்த காரை சோதனை செய்தனர். 

அந்த காரில் இருந்த அனைவரும் போதையில் இருந்ததால் போலீசார் காரை சோதனை செய்ததோடு பயணம் செய்த அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் காரில் இருந்தவர்கள் கோவிலூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெய ரவிவர்மா, ஆட்டாங்குடியை சேர்ந்த முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் கணேசன் மற்றும் பரமக்குடியைச் சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்தது.

போலீசார் நடத்திய சோதனையில் காரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காருடன் சேர்த்து மூன்று பேரும் வல்லத்திராக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைக்கப்பட்டனர்.

கிராம நிர்வாக அலுவலர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 people including Kovilur VAO arrested for smuggling ganja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->