#BREAKING | சிவகங்கை அருகே அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் பலி
4 killed in government bus lorry accident in sivagangai near
சிவகங்கை அருகே அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சிவகங்கை வழியாக மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை அருகே குயவன் வலசை பகுதியில் சென்றபோது எதிர்ப்பாராதவிதமாக அவ்வழியாக ஜல்லி ஏற்றி வந்த லாரியும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
4 killed in government bus lorry accident in sivagangai near