வெற்றி பெற்ற 40 எம்.பிகள் மக்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை - தங்கர்பச்சான்! - Seithipunal
Seithipunal


விருத்தாசலம் : கடந்த ஐந்து ஆண்டில் திமுக கூட்டணி 38 எம்பிக்களை வைத்து எதுவும் செய்யவில்லை. தற்போது 40 எம்பிக்களை வைத்து எதுவும் செய்யப் போவதில்லை என பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் குற்றம் சாட்டியுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இயக்குனர் தங்கர் பச்சன் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருதாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருதாகிரீஸ்வரர் திருக்கோவிலில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி நன்றி தெரிவித்தார். 

தங்கர்பச்சான் செய்தியாளர்கள் சந்திப்பு :

சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் திமுகவிற்கு 38 இடங்களை வென்று கொடுத்தார்கள். அவர்கள் 38 இடங்களை வென்ற அவர்கள் செய்த சாதனை என்ன? அதைக் கூட்டணிக்கு தற்போது 40க்கு 40 வெற்றியை மக்கள் கொடுத்துள்ளார்கள்.

அவர்கள் சாதிக்கப் போவது என்ன எனவும் திமுக கூட்டணி சென்ற முறை தேர்தலில் நின்றவர்கள் 75% பேர் மீண்டும் இந்த தேர்தலில் நின்று வென்று உள்ளார்கள். ஆனால் அவர்கள் ஒரு தடவை கூட மக்களை சந்தித்ததில்லை.

அவர்கள் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அந்த தொகுதிக்கு செலவு செய்ததும் இல்லை. அவர்கள் மக்களின் மீது சின்னத்தை திணிக்கிறார்கள் திமுக என்றால் உதயசூரியன் அதிமுக இரட்டை இலை என்று கூறினார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

40 MPs who won won do anything for people Thangar Bachan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->