8ம் வகுப்பு பொதுத்தேர்வு.. தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுவதற்கு இன்று முதல் ஜூன் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கவும் அறிவித்துள்ளது.

இதில், 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால், நேரடியாக 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 8ம் வகுப்பு பொதுத் தேர்வினை தனித்தேர்வர்களாக எழுதி தகுதிபெறும் மாணவர்கள் அரசின் வேலைக்கு செல்வதற்கும் தகுதி பெறுகின்றனர். அதன் காரணமாக பள்ளியில் இடையில் நின்ற மாணவர்கள் நேரடியாக தனித்தேர்வுகளாக தேர்வு எழுதி தகுதி பெறலாம்.

அந்த வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தேர்வுகளுக்கு இன்று முதல் ஜூன் 28ம் தேதி வரை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு தேர்வு கட்டணமாக ரூ‌.125 மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8th std public exam indual examiners apply from today


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->