சுற்றுலா பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்!...குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம்,  குற்றாலத்தில் பிரபல சுற்றுலா தலமாக விளங்கி வரும் குற்றால அருவிகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு ஏராளாமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். இங்கு குற்றால சீசன் காலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் போது, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கம்.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தென்காசி, பழைய குற்றால அருவியில் இந்த மாதம் 10-ம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்படுவதாக காவல்துறை அறிவித்தது.

இந்த நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீரான நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A good news for tourists bathing is allowed in all the waterfalls in coutralam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->