சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி மேஸ்திரி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதிய விபத்தில் மேஸ்திரி உயிரிழந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் நம்பகவுண்டன்பாளையம் கரையூரைச் சோ்ந்தவா் கிரி (வயது 40). இவா் முத்தூரிலுள்ள ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் மேஸ்திரியாக வேலை செய்து வந்தாா். இவரது மனைவி சுவேதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஓடைப்பாலம் அருகே கிரி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது முத்தூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கிரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கிரியை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் கிரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வெள்ளகோவில் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A person killed in car collision


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->