எம்ஜிஆர் பிறந்த நாளில் அரவிந்த் சாமிக்கு பேனர் வைத்த அதிமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கமனாபாத் நடிப்பில் உருவான தலைமை திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் வெறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்மிட்டாளம் ஊராட்சியில் அதிமுகவினர் வைக்கப்பட்ட பேனரில் எம்ஜிஆரின் புகைப்படத்திற்கு பதிலாக தலைவி திரைப்படத்தில் நடித்த அரவிந்த் சாமியின் புகைப்படத்தை அச்சிட்டு வைத்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் புகைப்படத்திற்கு பதிலாக அரவிந்த்சாமியின் புகைப்படம் இடம்பெற்றுள்ள பேனர் தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியதோடு வைரல் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK cadres print aravind Samy for mgr birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->