breaking || ஈரோடு இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வேட்புமனு தாக்கல்.!
Admk candidate ks Thennarasu filed nomination
வருகிற 27-ந் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் தொடங்கியது.
இந்த வேட்பு மனு தாக்கல் தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் தொடங்கியாது முதல் கடந்த 4-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றதில் 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார்கள். இதையடுத்து, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனு தாக்கல் கிடையாது.
அதனால், நேற்று (திங்கள்கிழமை) மட்டும் ஒரே நாளில் 13 பேர் வேட்பு மனுக்களை தாக்கலி செய்தனர். நேற்று வரைக்கும் மொத்தம் 59 பேர் மனு தாக்கல் செய்து உள்ளார்கள்.
இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்றுடன் இறுதி நாளாகும். அந்தவகையில், ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த வேட்பாளர் வாபஸ் பெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிவித்த அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை செய்யப்படுகிறது. மேலும், வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 10-ந் தேதி கடைசி நாளாகும். ஆகவே அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
English Summary
Admk candidate ks Thennarasu filed nomination