விளைநிலங்களை கையகபடுத்தியதற்கான காரணம்! என்.எல்.சி நிர்வாகம் விளக்கம்! - Seithipunal
Seithipunal


விளைநிலங்களை காயகப்படுத்தியதற்கான காரணம் குறித்து என்.எல்.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது:

ஏற்கனவே இழப்பீடு வழங்கிய, சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விளைநிலப் பகுதியில் பயிரிடப்பட்ட விவசாய நிலத்தில் இயந்திரங்களைக் கொண்டு நிலத்தை கையகப்படுத்தியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் என்.எல்.சிக்கு எதிரான விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது என்.எல்.சி நிர்வாகம் அதற்கான ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.

அதன்படி, 'கடலூர் மாவட்டம் அரசக்குழி, முதனை, இருப்புக்குறிச்சி உள்ளிட்ட 5 கிராமங்களில் பெய்துவரும் மழை நீரானது 2-ம் சுரங்கத்தை ஒட்டியுள்ள பரவனாற்றில் கலக்கும். இதனால் பரவனாற்றில் சுரங்க முன்னேற்றத்துக்காக 13 கி.மீ நீளத்துக்கு ஆற்றுப்பாதை திருப்பிவிடப்பட்டு அதற்கான சீரமைப்பு பணிகளை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டது.

இதில் மேல்வளையமாதேவி அருகே 1.5 கி.மீ நீளத்துக்கு பணிகள் முடிக்கப்படாமல் இருந்ததால், 
தொடர் மழை பெய்து கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு பரவனாற்றில் அதிகளவு மழைநீர் சென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமப்புறங்கள் பாதிப்பு ஏற்படும். 

மேலும், 60 மீட்டர் தொலைவில் உள்ள சுரங்கத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதாலும் பரவனாற்றின் சீரமைப்பு பணிகள் முடிக்கப்படாத ஆற்றுப் பாதையை ஒழுங்குபடுத்த நிலம் தேவைப்படுகிறது.

எனவே பரவனாற்றின் பாதையை முடிக்க வேண்டிய அவசர சூழல் ஏற்பட்டதால், அப்பகுதி விவசாயிகளிடம் பயிர் செய்ய வேண்டாம் என ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் விவசாயிகள் பயிர் செய்துள்ளதால் ஒரு பொறுப்புள்ள நிறுவனம் என்ற முறையில் இழப்பீடு தர முன்வந்து, மாவட்ட நிர்வாகத்திடம் தனிநபர் காசோலையும் வழங்கப்பட்டுள்ளது' என என்.எல்.சி தெரிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agricultural lands acquisition reason NLC management explanation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->