இதுக்கு மேல பொறுக்க முடியாது! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


அதிமுக சார்பில் திருச்சியில் ஆகஸ்ட் 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திருச்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரியும், உயர்த்தப்பட்டுள்ள வரிகளை திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி, வீட்டு வரி, குப்பை வரி, பாதாள சாக்கடை இணைப்புக் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை விடியா திமுக அரசின் உத்தரவுப்படி மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தி உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனது தலைமையிலான அம்மா ஆட்சியின்போது, மக்கள் நலன் கருதி திருச்சி மாநகராட்சியில் “Smart City” அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு நலத் திட்டப் பணிகள், சாலைப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள், பல இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்களுடன் கூடிய சாலையோர பூங்காக்கள், கைப்பிடிகளுடன் கூடிய நடை மேடைகள், பல சமூக நலத் திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. ஆனால், விடியா திமுக அரசு பதவியேற்றது முதல், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் குடிதண்ணீருடன் கழிவு நீர் கலந்து வருவதால், கள்ளத் தெரு, ராணி தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, சந்துகடை, சமஸ்பிரான் தெரு, முத்தழகு பிள்ளை தெரு, கொத்தமங்கலம், பிராட்டியூர், பீரங்கி குளத் தெரு, அல்லிமால் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்களிடையே டெங்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவி வருவதோடு, 60-க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பலர் மரணமடைந்து விட்டதாகவும் அப்பகுதி மக்கள் ஆதங்கத்தோடு தெரிவிக்கின்றனர்.

குடிநீர் பராமரிப்புப் பணி, குப்பை சேகரிப்பு பணி உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் தனிப்பட்ட லாபங்களுக்காக தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
கழக ஆட்சிக் காலத்தில், கழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட பயணியர் நிழற்குடைகள் முறையாக பராமரிக்கப்படாமல் வீணாகி வருகிறது.

மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக அரசின் மெத்தனப் போக்கிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும்; கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பராமரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் விடியா திமுக அரசைக் கண்டித்தும்; பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரியும், உயர்த்தப்பட்டுள்ள வரிகளை திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK EdappadiPalaniswami Trichy protest announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->