#BigBreaking | அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முதல் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி தனது முதல் அறிவிப்பை சற்று முன்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், வருகின்ற ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் அதிமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரூபாய் பத்து ரூபாய் செலுத்தி கட்சி தலைமை அலுவலகத்தில் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி அந்த அறிவிப்பு தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில், எடப்பாடி பழனிசாமி எதிர்த்து யாரும் போட்டியிடாததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

வெற்றிக்கான சான்றிதழ் இன்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளும், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதால், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக சற்று முன்பு தான் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK GS EPS 1st announce 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->