பீர் பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்: அதிரடியாக உயர்ந்த மதுபான விலை..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அதிக அளவில் வருமானம் வருவதால் டாஸ்மாக் கடைகள் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஏழை மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வாங்கி செல்லும் இடமாக டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. 

அதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் மொத்தம் 4879 மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. பிராந்தி, விஸ்கி, ராம், ஜின், ஓட்கா போன்ற சாதாரண மது வகைகளின் விலை குவாட்டர் பாட்டிலுக்கு ரூ. 10 உயர்கிறது. 

ஆஃப் பாட்டில் ரூ. 20 அதிகரிக்கும். முழு பாட்டில் விலை ரூ. 40 அதிகரிக்கிறது. முழு பாட்டில் ரூ. 80 வரை விலை அதிகரிக்கிறது. அனைத்து வகையான பீர் பாட்டிலுக்கும் ரூ. 10 உயர்கிறது. 

நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை மதுபான கடைகளில் 35 வகையான பீர் மற்றும் 13 வகையான விற்பனை செய்யப்படுகிறது. சாதாரணமாக மது வகைகளில் 43 பிராண்டுகள், நடுத்தர அளவில் 49 பிராண்டுகள், பிரீமியம் பிராண்டுகளில் 128 வகை விற்பனை செய்யப்படுகிறது. 

உயர்தர மது கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான விலை படிப்படியாக உயர்த்த அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் டாஸ்மாக் மதுபானங்களில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

all types beer price hike


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->