12 மணி நேர வேலை மசோதா.."தமிழக அரசின் பேச்சு வார்த்தை தோல்வி".. திமுக உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை அனுமதி வழங்குவது தொடர்பான தொழிலாளர் திருத்த மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றும் பொழுது திமுக கூட்டணி கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

அதனையும் மீறி தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொழிலாளர் திருத்த சட்ட மசோதாவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஏ.ஐ.யு.டி.சி, சி.ஐ.டி.யு மற்றும் ஜனநாயக மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் தலைமையிலான குழுவினருடன் அனைத்து தொழிலாளர் சங்க பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சு வார்த்தையில் தமிழகத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்து சங்கங்களும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. திமுகவின் தொமுச உட்பட அனைத்து சங்கங்களும் இந்த சட்ட மசோதாவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது. 

இந்த பேச்சு வார்த்தையின் பொழுது அமைச்சர்கள் குழுவினர் தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிறுவனங்களில் மட்டுமே சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்ததற்கு தொழிலாளர்களை நேரடியாக பாதிக்கக்கூடிய எந்த ஒரு விஷயமும் தேவையில்லை என தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி தமிழக அரசு இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் திட்டமிடப்படி தமிழக முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அனைத்து தொழிலாளர் சங்கங்களும் கருத்து கேட்டுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளன. இதன் மூலம் தொழிற்சங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

All workers unions Oppose 12 Hours Work Bill


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->