#BREAKING:: கொந்தளிப்பில் தமிழகம்... அமலுக்கு வரும் "12 மணி நேரம் வேலை".. களம் இறங்கும் கூட்டணி கட்சிகள்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நிறைவடைந்தது. கடைசி நாளான அன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதி வழங்கும் வகையில் சட்டம் முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

அதனையும் மீறி சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 12 மணி நேர வேலைக்கு அனுமதிக்கும் சட்டம் முன்வடிவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

தமிழக முழுவதும் பல மாவட்டங்களில் ஏ.ஐ.டி.யு.சி மற்றும் சி.ஐ.டி.யு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் 12 மணி நேரம் வேலைக்கு அனுமதிக்கும் மசோதா குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தொழிலாளர் திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் திருத்த மசோதா உள்ளிட்ட 17 மசோதாக்கள் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள் சட்ட துறையின் மூலம் ஆளுநரின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்படும். இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் தமிழகத்தில் 12 மணி நேர வேலை சட்டம் அமலுக்கு வரும். இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலினை திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று இரவு 7:00 மணி அளவில் தொழிலாளர் திருத்த மசோதாவை திரும்ப பெறுவது குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளனர். 

திமுக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு தொழிலாளர் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதக்கலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது கூட்டணி கட்சியினர் இடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் திமுக கூட்டணி கட்சிகளே வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Alliance party leaders to meet CM withdrawal of 12hour work bill


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->