எடப்பாடி பழனிசாமியுடன் ஒருபோதும் இணையமாட்டோம் -  டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வருகிற 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அணைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற அ.ம.மு.க. நிர்வாகியின் குடும்ப நிகழ்ச்சியில் கட்சியின் பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:- 

"ஈரோடு தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க.விற்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்காததால், நாங்கள் போட்டியில் இருந்து விலகி விட்டோம். இந்த இடைத்தேர்தலில் சுயேச்சையாக நிற்கும் வேட்பாளருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி நாங்கள் எந்த கருத்தும் கூறவில்லை. 

ஆனால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் கண்டிப்பாக குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம். அதனால், இந்த தேர்தலில் அ.ம.மு.க.வின் ஆதரவு யாருக்கும் கிடையாது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓர் அணியில் இணைந்து ஜெயலலிதாவின் கட்சியை மீட்டெடுப்போம். 

இரட்டை இலை சின்னம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிடம் இருந்தபோது மிகுந்த செல்வாக்குடன் இருந்தது. ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும்போது அதன் செல்வாக்கினை இழந்து கொண்டே வருகிறது. 

அந்த சின்னத்தை மிகுந்த செல்வாக்கு உள்ள சின்னமாக மற்றும் காலம் கூடிய விரைவில் வரும். எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிகமாக தான் இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஓ.பன்னீர்செல்வத்தை நிச்சயமாக சந்திப்போம். 

ஒருபோதும் நாங்கள் எடப்பாடி பழனிசாமி உடன் இணையமாட்டோம். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுடன் தான் இணைவோம்" என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk party leader ttv dinakaran press meet in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->