ஒரே மேடையில் அண்ணாமலை, சீமான் - பரபரப்பில் அரசியல் களம்.!
annamalai and seeman participate college function in chengalpat potheri
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொத்தேரி எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராயகம் சார்பில், மாபெரும் பேச்சு போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே மேடையில் அமர்ந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “சீமான் அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்பதைவிட போர்க்களத்தில் நிற்கக் கூடிய தளபதியாக பார்க்கிறேன். அவர் எடுத்துக் கொண்ட கொள்கையில் நிலையாக இருக்கிறார்.
எனக்கும் சீமானுக்கு பெரிய வித்தியாசம் கிடையாது. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். சீமான் தமிழில் தேசியத்தை பார்க்கிறார்” என்றுத் தெரிவித்தார். சீமானும் அண்ணாமலையும் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது.
English Summary
annamalai and seeman participate college function in chengalpat potheri