அடுத்த அதிர்ச்சி! 15 வயது சிறுமியிடம் நம்பர் கேட்டு தொல்லை, தட்டிக்கேட்ட தந்தை மீது தாக்குதல்! அப்பு பிரியாணி கடை ஊழியர்கள் கைது! - Seithipunal
Seithipunal


சிறுமியின் தந்தையை தாக்கிய புகாரில் அயனம்பாக்கம் அப்பு பிரியாணி கடை மேலாளர் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

15 வயது சிறுமியிடம் அலைபேசி எண் கேட்டு தொல்லை கொடுத்ததை, சிறுமியின் தந்தை தட்டிக் கேட்டதால் தாக்குதல் என்று புகார் எழுந்தது. 

சிறுமியின் தந்தை புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அப்பு பிரியாணி கடை மேலாளர் கிஷோர் மற்றும் மதன் ஆகியோரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மேலும் இவர்கள் இரண்டு பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் திருவேற்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஏற்கனவே தரமற்ற உணவு தயாரித்த புகாரில் அப்பு பிரியாணி கடை சமையலறைக்கு சீல் வைக்கப்பட்டது சர்ச்சையாகி இருந்தது.

பணம் இல்லாதவர்கள் வாழ்க்கையில் முன்னேற கூடாதா? என்று அப்பு கடையின் உரிமையாளர் காணொளி ஒன்றை வெளியிட்டும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகாத வார்த்தையில் திட்டியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். 

ஏற்கனவே இது குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், வேண்டுமென்றே அப்பு பிரியாணி கடையை முடக்குவதாக அவரின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக குற்றம் சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Appu Kadai Briyani Staffs Arrested for Attack Case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->