அருணாச்சலேஸ்வரர் கோயிலின் உண்டியல் காணிக்கை இரு மடங்கு உயர்வு..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அக்னி ஸ்தலமான அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி கிரிவலம் முடிந்த நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதன்படி கார்த்திகை மாத தீபத் திருவிழா மற்றும் பௌர்ணமி கிரிவலம் முடிந்ததை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வந்தது.

 

இந்த காணிக்கை எண்ணும் பணிகள் முடிவில் 2 கோடியே 74 லட்சத்து 21 ஆயிரத்து 492 ரூபாய் ரொக்கமும், 278 கிராம் தங்கமும், 2.261 கி.கி வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இந்தத் தொகை கடந்த ஆண்டை விட கூடுதலாக 1 கோடியே 52 லட்சத்து 75 ஆயிரத்து 359 ரூபாயும், 35 கிராம் தங்கமும் 1.282 கி.கி வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பினால் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பக்தர்களின் வருகை குறைந்து இருந்த நிலையில் இந்த ஆண்டு அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக அருணாச்சலேஸ்வரர் கோயிலின் உண்டியல் காணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arunachaleshwarar temple undiyal collection doubled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->