சென்னை | ரூ.1000 கோடி மோசடி! பாஜக நிர்வாகி கைது! - Seithipunal
Seithipunal


சென்னையில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழகத்தில் 13 கிளைகளை தொடங்கி, பொது மக்களிடம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு சுமார் 1600 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்திருப்பது அம்பலம் ஆகியுள்ளது.

தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் தோறும் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி, 1678 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது இந்த ஆருத்ரா நிறுவனம்.

இந்த பணத்தை முதலீட்டாளர்களான பொதுமக்களுக்கு திருப்பித் தராமல் ஆருத்ரா நிறுவனம் மோசடி செய்ததாக, முதலீட்டார்கள் புகார் அளித்தனர்.

இதன் பேரில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட ஐந்து நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக இந்நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரிஷ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, ஹரிஷின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனை அடுத்து இன்று பாஜக நிர்வாகி ஹரிஷ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான நாராயண என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aruthra bjp harish arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->