சதுரகிரி மலைக்கு செல்லும்.. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஏமாந்து விடாதீர்கள்.!
Attention Sadhuragiri Temple devotees
மழையினால் சதுரகிரி கோவிலுக்கு செல்கின்ற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்ட மிக பிரபலமான இடம் தான் சதுரகிரி மலை. இங்கு 64,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில், பௌர்ணமி மற்றும் அமாவாசை பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய செல்வார்கள். மாதத்தில் 8 நாட்கள் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். சில நேரங்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு மலையேற தடை விதிக்கப்படும்.
இந்நிலையில், சதுரகிரி கோவிலுக்கு செல்கின்ற ஓடைகளில் நீர்வரத்து கனமழையினால் அதிகரித்துள்ளது. எனவே, பக்தர்களுக்கு சதுரகிரி மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 25ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
English Summary
Attention Sadhuragiri Temple devotees