ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்: ஸ்ரீரங்கம் கோயில் நடை அடைப்பு! - Seithipunal
Seithipunal


ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் பாதுகாவலர் பக்தரை தாக்கி பக்தருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியதால் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது. 

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் பூலோக வைகுண்டம் திருவிழா இன்று திருநாளும் தாண்டகம் என்னும் உற்சவத்தில் மூலம் துவங்க உள்ளது. 

இதனால் கர்நாடகா மற்றும் ஆந்திர ஐயப்ப பக்தர்களும் இன்று காலையில் அரங்கனை தரிசிக்க வந்தனர். அபோது ஐயப்ப பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஐயப்ப பக்தர்களை ஊழியர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஒரு ஐயப்ப பக்தரை சரமாரியாக தாக்கிய தற்காலிக ஊழியர்களான செல்வம், விக்னேஷ் குழுவினர் மீது காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

காயம் அடைந்த ஐயப்ப பக்தர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayyappa devotees Attack Srirangam temple blocked


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->