Adani Scam: ஊழல் குற்றச்சாட்டினை ஒப்பு கொள்கிறீர்களா CM ஸ்டாலின்? பாஜக கேள்வி!
BJP Narayanan Say about TNGovt DMK MKStalinAdani scam
நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆவணத்தில், அதானி குழுமம் அமெரிக்காவில் 300 கோடி அமெரிக்க டாலர், அதாவது 25,500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளைத் திரட்டியதாகவும், இந்த முதலீடுகளை திரட்டுவதற்கு அடிப்படையாக பல்வேறு மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைக் காட்டியதாகவும், அந்த ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக பல அமைப்புகளின் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து விட்டு அதை மறைத்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.
அந்த ஆவணத்தின் 20 மற்றும் 21-ஆம் பத்திகளில் தமிழ்நாடு மின்சார வாரியமும், அதன் அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அதிகாரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வழக்கு ஆவணத்தின் 50-ஆம் பத்தியில்,’’ ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், ஒதிஷா, ஜம்மு - காஷ்மீர், தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்கள் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து உற்பத்தியுடன் இணைந்த திட்டத்தின்படி சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை (Power Sale Agreement PSA) செய்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஆந்திர மின்சார வாரியத்திற்கு 7 ஜிகா வாட் சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்காக ஒப்பந்ததைப் பெறுவதற்காக அம்மாநில மின்சார வாரிய அதிகாரிக்கு ரூ.1750 கோடி கையூட்டு வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரை தமிழ்நாடு, சட்டிஸ்கர், ஆந்திரா,ஒடிஸா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் மின்சார கொள்முதலில் அந்தந்த மாநில அரசுகளோடு செய்து கொண்ட ஒப்பந்தங்களில் ஊழல் நடந்துள்ளது என்று அதானி நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றம் ஒன்று குற்றம் சாட்டியுள்ள நிலையில் அந்த நேரத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த, இப்போதும் தொடர்கின்ற திமுக அரசும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் அப்போதும், இப்போதும் அமைச்சராக இருந்த, இருக்கிற அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களும் இந்த ஊழல் குற்றச்சாட்டினை ஒப்புகொள்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Narayanan Say about TNGovt DMK MKStalinAdani scam