அடுத்தடுத்து வரும் சம்மன் - சீமான் வீட்டு வாசலில் வைக்கபட்ட போர்டு.!
board front of seeman house
பிரபல திரைப்பட நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விசாரணைக்கு ஆஜராகக் கோரி நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் போலீசார் நேற்று சம்மனை ஒட்டினர்.
அந்த சம்மனை அங்கிருந்த காவலாளி அமல்ராஜ் கிழித்து எறிந்ததால், போலீசாருக்கும், அவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. முன்னாள் ராணுவ வீரரான காவலாளி அமல்ராஜ் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில், நீதிமன்ற காவலில் 15 நாட்கள் சிறையில் காவலாளி அமல்ராஜ் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, இன்று காலையில் சீமான் வீட்டு வாசலில் சம்மன் ஒட்ட தனி போர்டு வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நிறத்தில் உள்ள அந்த போர்டில், "சம்மனை ஒட்டு சார்வு செய்ய விரும்பும் காவல் அதிகாரிகள் இங்கே ஒட்டிச்செல்லவும்" என்று மார்க்கர் பேனாவால் எழுதப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
board front of seeman house