சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!...பயணிகள் கடும் பீதி!
Bomb threat to chennai tambaram railway station passengers panic
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக விமானங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விமான நிலையங்கள் என பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தை அடுத்து, போலீசார் மோப்ப நாய் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளுடன் சோதனையில் ஈடுபடுகின்றனர்.
சோதனை முடிவில், மிரட்டல்கள் வெறும் புரளி என்று தெரிய வருகிறது. மேலும், பெரும்பாலான மிரட்டல்கள் விபிஎன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இமெயில் மூலமாக விடுக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை கண்டுபிடிப்பதில் கடும் சவால் நீடிக்கிறது.
இந்த நிலையில், இன்று தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு மிரட்டல் வந்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் தாம்பரம் நடைமேடை முழுவதும் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக போலீசார் திடீரென சோதனை செய்து வருவதால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.
English Summary
Bomb threat to chennai tambaram railway station passengers panic