திடீரென பற்றி எறிந்த கார் -  தலைதெறிக்க ஓடிய பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


நாளை தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாலை முதலே பூஜை பொருட்கள், பழங்கள், பூக்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது. 

இந்த நிலையில், சேப்பாக்கம் கிருஷ்ணசாமி சாலையை சேர்ந்த இளவரசன் என்பவர் தனது காரில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்தார். பழ வியாபாரியான இவர் பழ மார்க்கெட் வளாகத்தில் தனது காரை நிறுத்திவிட்டு அங்குள்ள கடைக்கு சென்று பழங்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் சென்ற காரில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர் இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் படி அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. 

காரின் அருகில் மற்ற வாகனங்கள் எதுவும் இல்லாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், கார் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car fire accident in chennai koyambedu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->