அரியலூர் பட்டாசு ஆலை விபத்து - உரிமையாளர் மீது வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


அரியலூர் பட்டாசு ஆலை விபத்து - உரிமையாளர் மீது வழக்குப்பதிவு.!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் "யாழ் அன்ட் கோ" என்ற பெயரில் நாட்டுவெடி தயாரிப்பு ஆலை நடத்தி வந்துள்ளார்.

இந்த ஆலையை ராஜேந்திரனின் மருமகன் அருண்குமார் என்பவர் நிர்வாகம் செய்து வருகிறார். இந்த ஆலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு நாட்டு வெடிகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில், இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. 

இந்த வெடி விபத்தில் பத்து பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஆறு பேர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் ஆலையை நடத்தி வந்த அவரது மருமகன் அருண்குமார் உள்ளிட்டோர் மீது விபத்து, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், ஆபத்தான வெடிப்பொருட்களை வைத்திருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on 2 peoples for ariyalur firecrack factory fire accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->