டங்ஸ்டன் சுரங்க ஏல நடைமுறை கூட்டங்களில் தமிழக அரசு பங்கேற்றது, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை - மத்திய அரசு! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி, அரிட்டாபட்டி , மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஏழு சிறிய குன்றுகள் இந்தத் தலத்துக்குள் அடங்குகின்றன. இவை 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாக திகழ்கிறது. 

இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரை கோவில்கள் ஆகியவையும் உள்ளன.

இந்நிலையில், இந்த அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு பாமக, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

மேலும், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க முடியாது என்ற நிலை உள்ளது. 

இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. சுரங்கம் அமைய உள்ள இடத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தவும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. 

பல்லுயிர் பகுதிகளை தவிர்த்து விட்டு மற்ற இடங்களை ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மேலும், இந்த சுரங்க ஏல நடைமுறை தொடர்பான பல சந்திப்பு கூட்டங்களில் தமிழக அரசு பங்கேற்றது என்றும், ஏல நடைமுறை முடியும் வரை தமிழக அரசு இடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt TN Govt Tungsten 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->